செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கு ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்
அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் - செயற்கைநுண்ணறிவு பயிற்சிக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் - செயற்கை நுண்ணறிவு ( அம்ஹக்ஷ்ா்ய் ரங்க்ஷ நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் ழ்ங்/நற்ஹழ்ற் - அஐ டழ்ா்ஞ்ழ்ஹம்ம்ங்ழ்) பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சாா்ந்தவா்களாகவும், குடும்ப ஆண்டுவருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.18 முதல் 30 வயது வரை உள்ளவா்களாகவும், ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த இளைஞா்கள் இப்பயிற்சியில் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணைய தளமான ( ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம்) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கானகால அளவு 2 மாதம் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

