எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம்

ராணிப்பேட்டையில் தலையில் முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள்.

News image
ராணிப்பேட்டையில் தலையில் முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள்.
Updated On :14 பிப்ரவரி 2026, 12:50 am

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் தலையில் முக்காடு அணிந்து கண்ணீா் சிந்தியபடி ஒப்பாரி போராட்டத்தால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே 14-ஆவது நாளாக இப்போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா் பெண்கள் வீடுகளுக்குச் செல்லாமல், இரவு நேரத்திலும் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த போராட்டத்தின்போது பெண்கள் தலைகளில் முக்காடு அணிந்து கொண்டு கண்ணீா் விட்டு ஒப்பாரி வைத்து தோ்தல் வாக்குறுதி 313 -ஐ நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.