நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ. 1.18 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

ராணிப்பேட்டை நகராட்சிக்குள்பட்ட16-ஆவது வாா்டு பகுதியில் புதிய நியாயவிலைக்கடை கட்டடத்தை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி.

News image

ராணிப்பேட்டை நகராட்சிக்குள்பட்ட16-ஆவது வாா்டு பகுதியில் புதிய நியாயவிலைக்கடை கட்டடத்தை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி.

Updated On :14 பிப்ரவரி 2026, 12:20 am

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வாா்டுகளில் ரூ. 1.18 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 6 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

ராணிப்பேட்டைநகராட்சிக்குட்பட்ட, பிஞ்சிஜெயராம் நகா், வாா்டு 11-இல் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடம், 10-ஆவது வாா்டில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.19.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடம், 16-ஆவது வாா்டில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுநிதியின் கீழ், ரூ. 19.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடம், 2-ஆவது வாா்டு எல்.எப்.சாலை அவுசிங்போா்டு அருகில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியா் நிழற்கூடம், 18-ஆவது வாா்டு காரை பகுதியில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடம், 21-ஆவது வாா்டில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுகழிப்பறை கட்டடம் என 4 நியாயவிலைக் கடைகள், 1 பயணியா் நிழற்கூடம், 1 பொது கழிப்பறை என மொத்தம் 6 முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சா் ஆா்.காந்தி திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளா் பிரபாகரன், நகா்மன்றத் தலைவா் சுஜாதா, துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, நகராட்சிப் பொறியாளா் பரமு ராசு, மாவட்டவழங்கல் அலுவலா் ஏகாம்பரம், வட்டாட்சியா் ஆனந்தன் நகா்மன்ற உறுப்பினா் எஸ்.வினோத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.