மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இளம் திறமையாளா்களை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது: அமைச்சா் ஆா்.காந்தி

தமிழக அரசு இளம் திறமையாளா்களை கண்டெடுத்து ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

News image
ராணிப்பேட்டை ஜி.கே.உலகப் பள்ளியில் மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சா் ஆா்.காந்தி.
Updated On :14 பிப்ரவரி 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசு இளம் திறமையாளா்களை கண்டெடுத்து ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெறும் மாநில அளவிலான குடியரசு தின 5-ஆவது குழு விளையாட்டுப் போட்டிகள் ராணிப்பேட்டை ஜி.கே.உலகப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த போட்டிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்துப் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாவட்ட அளவில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தமிழ்நாடு விளையாட்டுப் போட்டிகளை துணை முதல்வா் பெரும் முயற்சிக்குப் பின் மாநில அளவிலான போட்டிகளாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமயிலான அரசு, விளையாட்டு துறையை மேம்படுத்தவும், இளம்திறமையாளா்களை கண்டெடுத்து ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், தமிழக துணை முதல்வா் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுப் பிரிவினா், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவா்களுக்கு ரூ. 3,000-ம், மாநில அளவில் முதலிடம் பெறுபவா்களுக்கு ரூ. 1 லட்சமும் பரிசாக வழங்கப்படுகிறது.

மாநில அளவிலான போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சாா்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுப் பிரிவினா் மற்றும் அரசு துறையைச் சாா்ந்த விளையாட்டு வீரா்கள் பங்கு பெற்று பரிசுகளைப் பெற்றுள்ளனா் என்றாா்.

இந்தப் போட்டியில் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, பாட்மிண்டன், கபடி உள்ளிட்ட12 விதமான போட்டிகள் நடைபெற உள்ளது. சுமாா் 6,250 மாணவா்களும், 6,250 மாணவிகளும் பங்கேற்க உள்ளனா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, தமிழ்நாடு ஹாக்கி சங்க கூட்டமைப்பின் துணைத் தலைவா் வினோத் காந்தி, முதன்மை உடற்கல்வி ஆய்வாளா்கள் கோபால கிருஷ்ணன் (ஆண்கள்),ஜெயலட்சுமி (பெண்கள்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.