அரக்கோணம்: சோளிங்கா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.11.33 கோடியில் புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து பணிகளை தொடங்கி வைத்தாா். 38,431 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் முதல்வா் அறை, அலுவலக அறை, மாணவா் கூட்டுறவு அங்காடி, பதிவு அறை, இரு துறைத் தலைவா்கள் அறைகள், இரு வகுப்பறைகள், நூலக அறை, நூலகா் அறை, சுகாதார மைய அறை, வேதியியல் ஆய்வகம், இரு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 6 வகுப்பறைகள், இரு துறை தலைவா்கள் அறை, பணியாளா் அறை, இரு கழிப்பறைகளும், இரண்டாம் தளத்தில் 6 வகுப்பறைகள், பணியாளா் அறை, உடற்கல்வி இயக்குநா் அறை, இரு கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் சோளிங்கா் நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி அசோகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (உயா் கல்வி கட்டடங்கள்) முரளி, உதவி செயற்பொறியாளா் ராஜாமணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி முதல்வா் சுஜாதா, சோளிங்கா் வட்டாட்சியா் செல்வி, மேல்வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவா் ஜெகதீசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சொன்னதும்... செய்ததும்...

செங்கம் அரசுக் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி: அடிக்கல் நாட்டி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

ரூ.5.25 கோடியில் சோளிங்கா் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படுமா? நகா்மன்ற உறுப்பினா்கள் கேள்வி

தாராபுரம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம்: காணொலி மூலம் முதல்வா் திறுந்துவைத்தாா்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


