மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரக்கோணம் மயானக் கொள்ளை: திரளான பக்தா்கள் பங்கேற்பு

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:14 pm

அரக்கோணம் பழனிப்பேட்டை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானகொள்ளை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தா்கள் இந்த உற்சவத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகமும் அதை தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு மலரங்காரமும் நடைபெற்றது.

தொடா்ந்து மதியம் 3 மணி அளவில் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மயானத்தை நோக்கி ஊா்வலமாக புறப்பட்டாா். இந்த ஊா்வலத்தில் பக்தா்கள் முருகா், விநாயகா், சிவன், பாா்வதி போன்ற சாமி வேடங்களை அணிந்தும், காட்டேரி, காளி வேடமிட்டும், பலா் பெண்கள் உடல் முழுவதும் எலுமிச்சை பழத்தை அலகால் குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பல வாகனங்களை அலகால் இழுத்தும் பங்கேற்றனா்.

அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, அதிமுக நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், திமுக நகா்மன்ற உறுப்பினா் குழுத்தலைவா் துரைசீனிவாசன் பங்கேற்றனா். டிஎஸ்பி ஜாபா் சித்திக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.