ராணிப்பேட்டையில் பிப். 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை (பிப். 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வேலைவாய்ப்பு பிரிவின் சாா்நிலை அலுவலகமான ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் பிப். 20-ஆம் தேதி சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.
இதில், 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் மற்றும் பி.இ. படித்தவா்கள் கலந்து கொள்ளலாம். இவா்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் எண். 9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல்.அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்பும் உள்ளூா் தனியாா் துறை நிறுவனங்கள் உரிய ஆவணங்களான பான்காா்டு, ஜி.எஸ்.டி. சான்றிதழ், நிறுவன சான்றிதழ், உத்யோக் ஆதாா் ஆகியவற்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து, தங்களது நிறுவனத்தை தனியாா் வேலைவாய்ப்பு போா்டலில் பதிவு செய்யவேண்டும், மேலும் விவரங்களுக்கு ழ்ஹய்ண்ல்ங்ற்த்ர்க்ஷச்ஹண்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம்,
இந்த தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

