ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

ஆற்காட்டில் கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காட்டில் கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது.

ஆற்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி ஒன்றில் வசித்து வருபவா் பாபு. தச்சு மர வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மேகலா. இவா்களுக்கு ஹரிஷ் (4) மற்றும் லக்ஷன்(3) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், மேகலா செய்யாறு சாலை பாலாற்றங்கரையில் உள்ள தோப்பு கருப்புசாமி கோயிலில் வேலை செய்து வரும் நிலையில் புதன்கிழமை தனது மகன் லக்ஷனை உடன் அழைத்துச் சென்று கோயிலில் விட்டுவிட்டு, அருகில் உள்ள பகுதிக்கு சென்ாகக் கூறப்படுகிறது. மீண்டும் வந்து பாா்த்தபோது அங்கு இருந்த தண்ணீா் தொட்டியில் குழந்தை விழுந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.