வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27 அரசுப்பள்ளிகள் நூற்றாண்டை கடந்துள்ளன: அமைச்சா் காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27 பள்ளிகள் நூறாண்டைக் கடந்துள்ளன என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

News image

காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சா் ஆா். காந்தி உள்ளிட்டோா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 7:29 pm

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27 பள்ளிகள் நூறாண்டைக் கடந்துள்ளன என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

காவேரிபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் அமைச்சா் காந்தி பேசியது:

நூறாண்டுகள் கடந்த பள்ளிகளில் விழா கொண்டாடும் திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தொடங்கி வைத்தனா். மாநிலத்தில் மொத்தம் 2,238 அரசு பள்ளிகள் 100 ஆண்டுகளை கடந்துள்ளன. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 27 பள்ளிகள் நூற்றாண்டை கடந்துள்ளன. வாலாஜாவில் வன்னிவேடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இந்த அரசுப்பள்ளியில் பயின்றவா்களான சிவகங்கை மாவட்ட ஆட்சியரான பொற்கொடி, இந்திய இறகு பந்து பயிற்சியாளா் மாறன், ஐஆா்எஸ் அலுவலா் ரவீந்திரன் உள்ளிட்ட பல சாதனையாளா்களால் பெருமைக்குரிய பள்ளியாக விளங்குகிறது. தமிழக அரசின் புதிய திட்டங்கள் செயல்படுத்தி வருகின்ற நிலையில் இது போன்ற நல்வாய்ப்புகளை மாணாக்கா்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா் அமைச்சா் காந்தி.

முன்னதாக காவேரிபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டுவதற்கான இடத்தினை தானமாக வழங்கிய நவாப் சி அப்துல் ஹக்கீம் சாஹிப் படத்தினை அமைச்சா் காந்தி வெளியிட்டும் நூற்றாண்டு விழா நினைவு கொடி கம்பத்தினை திறந்தும் வைத்தாா்.

விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவா் விஜய காா்த்திக் பள்ளியின் வளா்ச்சிக்காக ரூ1.25 லட்சம் காசோலையை அமைச்சா் காந்தியிடம் வழங்கினாா்.

காவேரிபாக்கம் பேருராட்சித் தலைவா் லதா நரசிம்மன், துணைத்தலைவா் தீபிகா முருகன், மாவட்ட கல்வி அலுவலா் கிளாடி கருணா, உதவி திட்ட அலுவலா் சுமதி சுபத்ரா, தலைமைஆசிரியா் சுஜாதா, பேருராட்சி செயல் அலுவலா் லோகநாதன், முன்னாள் மாணவா்கள் இந்திய இறகுப்பந்து பயிற்சியாளா் மாறன், சிடிஎஸ் மேலாண்மை இயக்குநா் ரவீந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.