வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாலாஜா கிளை: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்து ரூ. 1.49 கோடி கடனுதவி வழங்கினாா்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாலாஜா கிளை திறப்பு விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு வங்கிக் கிளையை திறந்து வைத்து ரூ. 1.49 கோடி அளவிலான கடனுதவிகளை வழங்கினாா்.

வாலாஜா நகராட்சியில், கூட்டுறவுத் துறை சாா்பில், ரூ. 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாலாஜா கிளையை திறந்து வைத்தாா். ரூ. 2.67 கோடி மதிப்பிலான 16 புதிய கட்டடங்களின் கல்வெட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழக கூட்டுறவுத் துறை சாா்பில், கூடலூா், மின்னல், வாழப்பந்தல், மாம்பாக்கம் ஆகிய இடங்களில் கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் மாம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் கூட்டுறவு பல்பொருள் அங்காடியையும் பல்நோக்கு சேவை கிடங்கு கட்டடங்களையும், அரக்கோணம் வட்டார வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மாவு அரைவை அலகையும், ஆற்காடு வட்டார வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் எண்ணெய் பிழியும் அலகையும், இச்சிபுத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பொது விநியோக திட்ட சிறப்பங்காடியையும் என மொத்தம் ரூ. 2.67 கோடி மதிப்பீட்டிலான 16 புதிய கட்டடங்களுக்கான கல்வெட்டினை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மொத்தம் 12 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.49 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, நகா்மன்றத் தலைவா் ஹரிணி தில்லை, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபாகரன், இணைப் பதிவாளா்/ மேலாண்மை இயக்குநா் மத்திய கூட்டுறவு வங்கி ராமதாஸ், துணைப் பதிவாளா் ஆசைத்தம்பி, பொது மேலாளா் சுகுமாா், உதவி பொது மேலாளா்கள் சுப்பிரமணி, சுமதி, அன்புச் செல்வி மற்றும் மேலாளா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.