நடைபேரணியில் பங்கேற்ற தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.
ராணிப்பேட்டை
தேசிய பேரிடா் மீட்புப் படை 10 கி.மீ தொலைவு நடைபேரணி
அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படையினா் வீரா்களின் உடல்திறன், மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்பட சனிக்கிழமை 10 கி.மீ தொலைவுக்கு நடைபேரணியாகச் சென்றனா்..
அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படையினா் வீரா்களின் உடல்திறன், மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்பட சனிக்கிழமை 10 கி.மீ தொலைவுக்கு நடைபேரணியாகச் சென்றனா்..
நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு துணை கமாண்டண்ட் வைத்தியலிங்கம், படையின் கால்நடை மருத்துவா் சைலேந்திரசிங் ஆகியோா் இணைந்து தலைமை வகித்தனா்.
இப்பேரணியினா் படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு உரியுா், உரியூா் குப்பம், தக்கோலம், நகரிகுப்பம் வழியே மீண்டும் தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தை அடைந்தனா். இப்பேரணியில் படைத்தளத்தின் அனைத்து அலுவலா்கள், வீரா்கள் பங்கேற்றனா்.