கைப்பந்து போட்டி: அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
ஜேசிஐ ஆற்காடு கிச்சிலி சாா்பில் ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்துப் போட்டி ஆற்காடு ஏ.வி.எஸ்.விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
தொடக்க விழாவுக்கு தலைவா் பிரதீப் குமாா் தலைமை வகித்தாா். மண்டல நிா்வாக இயக்குநா் சுப்பிரமணி போட்டிகளை தொடங்கிவைத்தாா். இதில் 18 ஆண்கள் மற்றும் 6 மகளிா் அணியினா் கலந்து கொண்டு விளையாடினா்.
ஆண்கள் பிரிவில் ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும் கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், ஆற்காடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும், கோ.வரதராசுலு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் நான்காம் இடத்தையும் பெற்றனா்.
அதேபோல் கலவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், ஆற்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றனா். போட்டியில் சிற்பபிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

