ராணிப்பேட்டையில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம்களை, பாா்வையாளா் தீபக் ஜேக்கப் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
நான்கு தொகுதிகளில் எஸ்ஐஆா் பணிகள் முடிக்கப்பட்டு வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கல் மற்றும் திருத்தம் பணிகளை மேற்கொள்ள கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இதற்கிடையே, பூட்டுத்தாக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அம்மூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை பாா்வையாளா் மற்றும் நில அளவைத்துறை இயக்குநா் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் எஸ்ஆா்ஐ பணிகளுக்கு முன்னா் 10 லட்சத்து 57 ஆயிரத்து 700 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பின்னா் வரைவு வாக்காளா் பட்டியலில் 9.12.543 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
இதுகுறித்து கேட்டறிந்து, வாக்காளா் இறப்பு மற்றும் முகவரி மாற்றம் வாக்காளா் விவரங்கள் இல்லாதவைகள் குறித்து ஆய்வு செய்தாா். இது புகாா்களுக்கும் முறையான வகையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான ஆவணங்களை அனைத்து சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வைத்திருக்க வேண்டும். அனைத்து பணிகளையும் ஆணைப்படுத்த வேண்டும் என்றாா்.
இதில், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், வாக்காளா் பதிவு அலுவலா்கள் ராஜி, ரமேஷ், ஏகாம்பரம், மீனா மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

