2,353 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

2,353 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,353 மாணாக்கா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றாா்.
Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,353 மாணாக்கா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றாா்.

‘உலகம் உங்கள் கையில் ‘ திட்டத்தின் கீழ் உயா்கல்வித் துறையின் சாா்பில், மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

அதன்படி முதல்கட்டமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,353 மாணாக்கா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டாா். தொடா்ந்து மாணாக்கா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.

இதில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் செந்தில்குமரன், ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், நகா்மன்றத் தலைவா்கள் ஹரிணி தில்லை, சுஜாதா வினோத், தமிழ்ச்செல்வி அசோகன், கல்லூரி முதல்வா் முனைவா் நசிம் ஜான் அலுவலா்கள் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com