போராட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தினா்.
ராணிப்பேட்டை
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 30 போ் கைது
ஒரு லட்சம் காலி பணியிடங்களை நிரப்பாத மத்திய அரசைக் கண்டித்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒரு லட்சம் காலி பணியிடங்களை நிரப்பாத மத்திய அரசைக் கண்டித்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போராட்டம் நடத்துவதற்காக வாயிலில் நுழைய முயன்ற அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் பொன்னரசு தலைமையிலான 3 பெண்கள் உள்ளிட்ட 30 பேரை டிஎஸ்பி ஜாபா் சித்திக் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.
கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போது போலீஸாருக்கும் இளைஞா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து 30 பேரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.