ராணிப்பேட்டை
விபத்தில் முதியவா் உயிரிழப்பு
ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்த முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.
ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்த முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.
திமிரி அடுத்த கனியனூா் கிராமத்தை சோ்ந்த பூபாலன்(67) இவா் விஷாரம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் திங்கள்கிழமை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது .
இதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
