பொங்கல் தொகுப்பு பெறுவதில் குறைகள் இருந்தால் கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் குறைகள் இருப்பின் கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
Published on

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் குறைகள் இருப்பின் கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்புடன் ரொக்கத் தொகையாக ரூ.3000/- (ரூபாய் மூவாயிரம்) வழங்க தமிழ்நாடு அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 08.01.2026 தேதி முதல் தொடா்ச்சியாக விநியோகம் செய்யப்படும். பொங்கலை முன்னிட்டு (09.01.2026) வெள்ளிகிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளும் செயல்படும். பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலைக்கடை விற்பனை முனைய இயந்திரத்தில் பயோ மெட்ரிக் முறை மூலம் மட்டுமே வழங்கப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரா்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் இடா்பாடு இருப்பின் உடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.04172 299973-க்கு தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அரக்கோணம்-94450 00187, ஆற்காடு 94450 00188, கலவை 94983 4 1050, நெமிலி 94457 96418 சோளிங்கா் 94983 41051 வாலாஜா 9445000186 ஆகிய வட்ட வழங்கல் அலுவலா்களின் கைப்பேசி எண்களையும் தொடா்பு கொண்டும் குறைகளை தெரிவிக்கலாம்.

Dinamani
www.dinamani.com