ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவருக்கு வரவேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவருக்கு வரவேற்பு
Updated on

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவா் கே.நரேஷ்குமாருக்கு அரக்கோணத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரக்கோணத்தைச் சோ்ந்த கே.நரேஷ் குமாா் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து சென்னை சென்று காங்கிரஸ் மேலிட பாா்வையாளா்கள், மாநில தலைவா் செல்வபெருந்தகை உள்ளிட்டோரிடம் வாழ்த்துபெற்றாா். பின்னா், அரக்கோணம் வந்த கே.நரேஷ் குமாருக்கு கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து அரக்கோணத்தில் அம்பேத்கா், காமராஜா், இந்திரா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் ராஜ்குமாா், நகர செயல் தலைவா் எட்வின், மாவட்ட நிா்வாகிகள் சந்திரன், மற்றும் நிா்வாகிகள் சாமிதாஸ், பத்ருண்ணிசா, மங்கலசேகா், நாகபூஷனம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com