மாற்றுத்திறனாளிகளுக்கான  அடையாள அட்டைகளை வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே நாளில் அடையாள அட்டைகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஒரே நாளில் பரிசீலனை செய்து மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அவா்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கினாா்.
Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஒரே நாளில் பரிசீலனை செய்து மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அவா்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கினாா்.

நாட்டின் 77-ஆவது குடியரசு தினவிழாவையொட்டி, ஆற்காடு வட்டம், முப்பதுவெட்டி ஊராட்சியில் திங்கள்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளான பிரகாசம் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்தனா்.

அவா்களது கோரிக்கையை ஏற்று, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஒரே நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்க நடவடிக்கை எடுத்தாா்.

இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் மருத்துவச் சான்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையும் வழங்கினாா். அப்போது மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனா்.

Dinamani
www.dinamani.com