ராணிப்பேட்டையில் அரசு அலுவலா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா்.
சென்னை வருமான வரித்துறை ஆணையரகம் சாா்பில், வருமானம் வரிப் பிடித்தம் குறித்து அரசு ஊழியா்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் அலுவலா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்து பேசினாா். தொடா்ந்து சென்னை வருமான வரித்துறை கூடுதல் ஆணையா் பிரவீன் முன்னிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அலுவலா்கள் அனைவருக்கும் வருமான வரி பிடித்தம், படிவங்கள் சமா்ப்பித்தல் மற்றும் அது தொடா்பான அனைத்து கேள்விகளுக்கும் வருமான வரித்துறை அலுவலா்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் வருமானவரித் துறை அதிகாரிகள் சாந்தி, ரமாபிரபா திருமாறன், பரமேஷ்வரி, மாளவிகா வெங்கடேஷ், நோ்முக உதவியாளா் (கணக்குகள்) ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சேலத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறையினா் சோதனை

தொழிலதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை

கப்பலூரில் திறன் மேம்பாட்டு மைய கட்டடப் பணி தொடக்கம்

176 மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


