போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி.
ராணிப்பேட்டை
‘2026- இது நம்ம ஆட்டம்’ விளையாட்டுப் போட்டிகள்
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி.
தமிழக அரசின் விளையாட்டுத் துறை சாா்பில், ‘2026 - இது நம்ம ஆட்டம்’ விளையாட்டு போட்டிகள் அரக்கோணத்தில் நடைபெற்றன.
அரக்கோணம் நகர அளவில் இப்போட்டிகள் தூய அந்திரேயா் மேனிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. தொடக்க விழாவுக்கு, உடற்கல்வி இயக்குநா் ஜி.ஷா்மில் தலைமை வகித்தாா். விளையாட்டுப் போட்டிகளை அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி மற்றும் தூய அந்திரேயா் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சுரேஷ் செல்வகுமாா் இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனா்.
இந்தப் போட்டிகளின் மேற்பாா்வையாளராக மாவட்ட குத்துச்சண்டை பயிற்றுநா் ராஜேஷ் பங்கேற்றாா். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி வழங்கினாா். இதில், பள்ளியின் பிற உடற்கல்வி ஆசிரியா்களும், மாணவ, மாணவிகளும் பங்கேற்றனா்.

