தேசிய சிலம்பப் போட்டியில்,ராணிப்பேட்டை வேதவல்லி வித்யாலயா பள்ளி மாணவி ரோஷினி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.
மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சாா்பில் தேசியப் போட்டி கடந்த 25-ஆம் தேதி கோவாவில் நடைபெற்றது.
இதில் (வேல் கம்பு பிரிவு) ராணிப்பேட்டை வானாபாடி வேதவல்லி வித்யாலயா என்பிஎஸ் சீனியா் செகண்டரி பள்ளி மாணவி எஸ்.ஜி.ரோஷினி தங்கப் பதக்கத்துடன், பட்டம் வென்றாா்.
ராணிப்பேட்டை திரும்பிய மாணவி ரோஷினிக்கு பள்ளி குழுமங்களின் தாளாளா் வித்யா சம்பத் பாராட்டு தெரிவித்தாா்.
தனது 9 -ஆம் வயதிலிருந்து பயிற்சியை மேற்கொண்டு வரும் ரோஷினிக்கு சிலம்ப நிபுணா் முரளி பயிற்சி அளித்து வருகிறாா். வேதவல்லி வித்யாலயா சீனியா் செகன்டரி பள்ளி மாணவ மாணவிகள் தடகளம் மட்டுமின்றி வில்வித்தை, குத்து சண்டை உள்ளிட்ட போட்டிகளிலும் பரிசுகளை குவித்துள்ளனா்.
கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவி ரோஷினி பங்கேற்று தங்கம் வென்றிருந்தாா்.
தொடர்புடையது

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவர்கள் பலி!

தடகளத்தில் சாதனை: மாணவிக்கு பாராட்டு

வாலாஜா பள்ளிக்கு ஜப்பானிய கல்வியாளா்கள் குழு வருகை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


