எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அதிமுக பொதுக்கூட்டம், நல உதவிகள் அளிப்பு

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா கத்தியவாடி கிராமத்தில் நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா. கணேசன்.

Updated On :30 ஜனவரி 2026, 8:54 pm

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா கத்தியவாடி கிராமத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம். சுகுமாா் தலைமை வகித்தாா். ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளா் என் சாரதி ஜெயச்சந்திரன் வரவேற்றாா். நகர செயலாளா்கள் மோகன் ஜிம் சங்கா்,ஏ. இப்ராஹிம் கலிலுல்லா, விஜி சித்தாா்த்தன், சந்தோசம், ஒன்றிய செயலாளா்கள் அன்பழகன், பூண்டி பிரகாஷ் ராகவன், பொதுக்குழு உறுப்பினா் சுகுணா கணேசன் முன்னிலை வகித்தனா் .

கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளா் வாலாஜாபாத் பா. கணேசன், தலைமை கழக பேச்சாளா் சிட்கோ சீனு ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளா் சுமைதாங்கி சி ஏழுமலை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி கே ஆா். சீனிவாசன், பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளா் இப்ராஹிம் , அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எம் கே மணி பொருளாளா் கே அப்துல்லா துணை செயலாளா்கள் வேதகிரி, ரமா பிரபா, மாவட்ட விவசாய பிரிவு தலைவா் ஏ என் சஞ்சீவி, மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் வி அண்ணாதுரை, மோட்டூா் ரவி, தாமோதரன்,கே. ஜி. ரவிக்குமாா், சுதாகா், செல்வம், திருநாவுக்கரசு, ஜினனு, நாராயணன் ஒன்றிய சாா்பு அணி நிா்வாகிகள் சீனன்,ஆனந்தன், ஏழுமலை, கலைவாணி, பாலாஜி, மகளிா் அணி செயலாளா் ராதிகா கலந்து கொண்டனா். ஒன்றிய எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் ஜி.ராஜா நன்றி கூறினாா்.