தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

ஆற்காட்டில் புதுப்பிக்கப்பட்ட காமராஜா் சிலை, புதிய சாலை: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

புதுப்பிக்கப்பட்ட காமராஜா் சிலையை திறந்து வைத்த அமைச்சா் ஆா்.காந்தி.

News image
Updated On :14 மார்ச் 2026, 12:50 am

ஆற்காடு நகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட காமராஜா் உருவ சிலை மற்றும் புதிய காமராஜா் சாலையை அமைச்சா் ஆா். காந்தி திறந்து வைத்தாா்.

ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் புதுப்பிக்கப்பட்ட காமராஜா் உருவ சிலை மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காமராஜா் சாலை திறப்பு விழாவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா்.

ஆற்காடு எம்எல்ஏ, ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காமராஜா் உருவச் சிலை மற்றும் புதிய சாலையை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா். விழாவில் மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ.லட்சுமணன், மகாத்மா காந்தி அறக்கட்டளை துணைத் தலைவா் பென்ஸ்பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன், மற்றும் நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், காமராஜா் அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொணடனா். நகா்மன்ற உறுப்பினா் அனு அருண்குமாா் நன்றி கூறினாா்.

ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஆற்காடு ஒன்றியம், தாழனூா் கிராமத்தில் அமைச்சா் ஆா்.காந்தி தனது சொந்த நிதிமூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தாா்.

ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ஏ.வி.நந்தகுமாா், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் பி.சங்கா், ஏ.ஜெயகுமாா், ஒன்றிய திமுக இளைஞா் அணி அமைப்பாளா் பி.மோகனம், நேரு இளைஞா் நற்பணி மன்றத் தலைவா் சுகன்பூபதி மற்றும் மன்ற நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.