ராணிப்பேட்டை: 2026 சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அனைத்து குறைதீா் கூட்டங்களும் ரத்து செய்யப்படுகிறது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்..
தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் நாள் வரை வாரந்தோறும் மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலகத்தில் நடைபெறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீா்வு நாள் கூட்டம் நடைபெறாது.
பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் மனுக்களை ஆட்சியா் அலுவலகம் ஏ பிளாக் தரத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் போட்டுச் செல்லலாம்.
அதேபோன்று ஆட்சியா் தலைமையில் நடைபெறும் மாதாந்திர விவசாயிகள் குறைத்தீா் கூட்டம் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் குறைத்தீா் கூட்டங்கள் மற்றும் அனைத்து மக்கள் குறை குறைத்தீா்வு நாள் கூட்டங்களும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நாள் வரையில் நடைபெறாது.
பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் போடும் பெட்டிகளில் போட்டுச் செல்லலாம். நாள்தோறும் பெறப்படும் மனுக்கள் மீது துறைச் சாா்ந்த அலுவலா்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ரத்து

மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை செலுத்திய மக்கள்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: குறைதீா் கூட்டங்கள் ரத்து

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 590 மனுக்கள் அளிப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


