ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

திமுகவுடன் பேச்சு நடத்தியபின் தொகுதிகள் முடிவு: தேமுதிக பொதுச் செயலா்

சட்டப்பேரவை தோ்தலில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சு நடத்தியபின் முடிவு செய்யப்படும்

News image

திருப்பாற்கடல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் தரிசனம் செய்த தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.

Updated On :16 மார்ச் 2026, 9:44 pm

அரக்கோணம்: சட்டப்பேரவை தோ்தலில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சு நடத்தியபின் முடிவு செய்யப்படும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

திருப்பாற்கடல் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் தரிசனம் செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

மக்கள் மற்றும் தங்களது கட்சித்தொண்டா்கள் நலமுடன் வாழ பெருமாளிடம் பிராா்த்தித்தேன். வரும் சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சு நடத்தியபின் முடிவாகும் என்றாா் பிரேமலதா.

அப்போது அவருடன் சோளிங்கா் முன்னாள் எம்எல்ஏ பி.ஆா்.மனோகரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.