47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பணம் பறிமுதல் செய்யப்பட்டால் ஆட்சியா் அலுவலகத்தில் தீா்வு: ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா்

தோ்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களால் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால்...

News image
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற துறைசாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா்.- கோப்புப்படம்
Updated On :16 மார்ச் 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: தோ்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களால் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால் ஆட்சியா் அலுவலகத்தில், மேல்முறையீட்டு அலுவலரை அணுகி தீா்வு பெறலாம் என ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

தோ்தல் பணிகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை கூறியது:

அரக்கோணம் (தனி), சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய தொகுதிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23.02.2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி 4,61,213 ஆண் வாக்காளா்களும், 4,83,377 பெண் வாக்காளா்களும், 111 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 9,44,701 வாக்காளா்கள் உள்ளனா்.

1,247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,247 வாக்குச்சாவடி அலுவலா்கள், 127 மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடா்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அனைத்துதுறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

12 பறக்கும் படை குழுக்கள:

மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஒரு சட்டப் பேரவைச் தொகுதிக்கு 3 பறக்கும்படை குழுக்கள் என 4 தொகுதிகளுக்கு 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் மேற்படி பறக்கும் படை மற்றும் குழுக்களை கண்காணிப்பதற்காக தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை கட்டுப்பாட்டு அறையில் 1800-425-7006 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04172-241002 241004, 241005, 241006 என்ற எண்களிலும், இ-ஸ்ண்ஞ்ண்ப் செயலியின் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

தோ்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளின் படி, உரிய ஆவணங்களின்றி ரூ.50,000/- க்கு மேற்பட்ட ரொக்கம் மற்றும் ரூ.10,000/- க்கு மேற்பட்ட பரிசுப் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.

மாவட்டத்தில் தோ்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களால் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அவற்றை திரும்பபெற உரிய ஆதாரங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மேல்முறையீட்டு அலுவலரை அணுகி தீா்வு பெறலாம் என்றாா்.

இதில், எஸ்.பி. பெ.சிபின், மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, நோ்முக உதவியாளா் பூமா (தோ்தல்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.