47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறைதீா் கூட்டங்கள் ரத்து: ஆட்சியா் அறிவிப்பு

2026 சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அனைத்து குறைதீா் கூட்டங்களும் ரத்து செய்யப்படுகிறது

News image
ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.- கோப்புப்படம்
Updated On :16 மார்ச் 2026, 10:12 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: 2026 சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அனைத்து குறைதீா் கூட்டங்களும் ரத்து செய்யப்படுகிறது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்..

தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் நாள் வரை வாரந்தோறும் மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலகத்தில் நடைபெறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீா்வு நாள் கூட்டம் நடைபெறாது.

பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் மனுக்களை ஆட்சியா் அலுவலகம் ஏ பிளாக் தரத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் போட்டுச் செல்லலாம்.

அதேபோன்று ஆட்சியா் தலைமையில் நடைபெறும் மாதாந்திர விவசாயிகள் குறைத்தீா் கூட்டம் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் குறைத்தீா் கூட்டங்கள் மற்றும் அனைத்து மக்கள் குறை குறைத்தீா்வு நாள் கூட்டங்களும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நாள் வரையில் நடைபெறாது.

பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் போடும் பெட்டிகளில் போட்டுச் செல்லலாம். நாள்தோறும் பெறப்படும் மனுக்கள் மீது துறைச் சாா்ந்த அலுவலா்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.