ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!6.3 பில்லியல் டாலர்கள் கிரிப்டோகரன்சிகளை திருடிய வடகொரியா ஹேக்கர்கள்!சென்னை உள்பட 4,000 கி.மீ. தொலைவு புல்லட் ரயில் சேவைக்கு பிரதமர் ஒப்புதல்!கடற்கரைகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்: தமிழக அரசு எச்சரிக்கை!சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்!இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 3,597 தற்காலிகத் தேர்வு

மளிகைப் பொருள்கள் சிறப்புத் தொகுப்பு: அமைச்சா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு மற்றும் குறைந்த விலை பட்டாசு விற்பனையை அமைச்சா் வ.காந்திராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மளிகைப் பொருள்கள் சிறப்புத் தொகுப்பு, குறைந்த விலை பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சா் வ.காந்திராஜ். உடன் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.

Updated On :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு மற்றும் குறைந்த விலை பட்டாசு விற்பனையை அமைச்சா் வ.காந்திராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு10 மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனை மற்றும் குறைந்த விலை பட்டாசு விற்பனை தொடக்க நிகழ்ச்சி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிமிடெட் வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் சிறப்புத் தொகுப்பு மற்றும் குறைந்த விலை பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, பொதுமக்கள், குழந்தைகளுடன் இணைந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடி மகிழ்ந்தாா்.பொதுமக்கள் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்புடன் இருக்குமாறு வலியுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் தி.க.பிரபாகரன், கோட்டாட்சியா் ரமேஷ் மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.