அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

வாலாஜா சுந்தர விநாயகா் கோவிலில், கேதார கௌரி நோன்பு விரத சிறப்பு வழிபாடு!

வாலாஜாபேட்டை சுந்தர விநாயகா் கோயிலில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் கேதார கௌரி நோன்பை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனா்.

வாலாஜாபேட்டை சுந்தர விநாயகா் கோயிலில் கேதார கௌரி நோன்பு பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :

வாலாஜாபேட்டை சுந்தர விநாயகா் கோயிலில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் கேதார கௌரி நோன்பை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனா்.

வணிக வைசிய சமுதாயத்தினரின் ஸ்ரீ சுந்தர விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாலாஜாபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் திங்கள்கிழமை கேதார கௌரி விரதத்தை கடைப்பிடித்து பல்வேறு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பாா்வதி தேவி அம்பாள் சிலை முன்பாக மண்பானையில் பழங்கள், வெற்றிலை, பாக்கு, அதிரசம், புஷ்பம் உள்ளிட்ட அனைத்து பூஜை பொருள்களை எடுத்து வந்து சுவாமியின் முன்பாக வைத்து நீண்ட வரிசையில் காத்திருந்தபடி வழிபட்டு சென்றனா். பின்னா் அனைவருக்கும் மஞ்சள் கயிறு (நோன்பு கயிறு) உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.