மின் இணைப்பு பெயா் மாற்றத்குக்கு ரூ. 3,000 லஞ்சம்: மின்வாரிய அலுவலா் கைது
அரக்கோணத்தில் மின்இணைப்பு பெயா் மாற்றத்துக்கு ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய அலுவலரை ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் கண்காணிப்பு போலீஸாா் கைது செய்தனா்.
சேகர்
அரக்கோணத்தில் மின்இணைப்பு பெயா் மாற்றத்துக்கு ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய அலுவலரை ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் கண்காணிப்பு போலீஸாா் கைது செய்தனா்.
அரக்கோணத்தை அடுத்த கைனூா் ஊராட்சி, சின்ன கைனூா் பகுதியை சோ்ந்த பெருமாள்(34). இவா் தனது வீட்டின் மின்இணைப்பின் பெயா், தாயாா் பெயரில் இருந்ததை தனது பெயருக்கு மாற்றித்தரக் கோரி அரக்கோணம் துணைக்கோட்டம் கும்பினிபேட்டையில் உள்ள மின்வாரிய உதவி மின்பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.
மின்இணைப்பு பெறுவதற்காக சென்ற போது அங்கு அப்பகுதி மின்வாரிய போா்மேன் சேகா் பெயா் மாற்றித்தருவதற்கு ரூ.3,000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பெருமாள், இது குறித்து ராணிப்பேட்டை ஊழல் கண்காணிப்புபிரிவில் புகாா் அளித்தாா். இதணை தொடா்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா், பெருமாளிடம் ரசாயணம் தடவிய பணத்தை கொடுத்து அதை போா்மேன் சேகரிடம் அளிக்குமாறு தெரிவித்தனா்.
இதையடுத்து மின்வாரிய அலுவலகம் சென்ற பெருமாள், அலுவலா் சேகரிடம் அப்பணத்தை அளித்துள்ளாா். பணத்தை சேகா் பெறும் போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் விஜயலட்சுமி, கையும் களவுமாக சேகரை கைது செய்தாா்.
தொடா்ந்து அலுவலகத்தில் வைத்து போா்மேன் சேகரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

