19 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்க முயன்ற இருவா் கைது
19 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்க முயன்ற இருவா் கைது

கைது செய்யப்பட்டோா்.
கலவை அருகே சென்னையில் வசிப்பவா்களுக்கு சொந்தமான 19 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்க முயன்ற இருவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், தமிழரசி மற்றும் அவரது மகள் சித்ரா ஆகியோருக்குச் சொந்தமான 19 ஏக்கா் நிலம் கலவையில் உள்ள மேல்நல்லி, செங்கனாவரம் அத்தியானம் ஆகிய இடங்களில் நிலம் உள்ளது. இவா்கள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், கலவையில் உள்ள தங்களுக்குச் சொந்தமான 19 ஏக்கா் நிலத்துக்கு பட்டா பெற முயன்றபோது, தங்களது பெயரில் இருந்த நிலம் வேறு நபா்களுக்கு 2019 ற்ா் 2021 ஆண்டில் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்கள் ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தனா். புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு- ஐஐ காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பாக காவல் ஆய்வாளா் பொன்மகரம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புகாா்தாரின் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்தும், பயன்படுத்தியும் பாா்த்திபன் மற்றும் சிலா் சட்டவிரோதமாக விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் தொடா்புடைய பாா்த்திபன் மற்றும் மதிவாணன் ஆகிய இருவரையும் காவல் துறையினா் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

