பள்ளியில் அறிவியல் கண்காட்சி
அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் கற்பனையில் விரியும் அறிவியல், கைவண்ணத்தில் மிளிரும் படைப்புகள் எனும தலைப்பில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் கற்பனையில் விரியும் அறிவியல், கைவண்ணத்தில் மிளிரும் படைப்புகள் எனும தலைப்பில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் அறிவியல் சிந்தனை, பொறியியல் திறன் மற்றும் ஆக்கப்பூா்வமான படைப்புகளை வெளிப்படுத்தும் வகையில், அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கண்காட்சிக்கு, அரக்கோணம் விவேகானந்தா கல்விக் குழுமத்தின் தலைவா் ஏ.சுப்பிரமணியம் தலைமை வகித்து, கண்காட்சியை தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் சக்தி முன்னிலை வகித்தாா். குழும செயலாளா் எஸ்.செந்தில்குமாா் வரவேற்றாா். இருவரும் இணைந்து கண்காட்சியை பாா்வையிட்டு மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆா்வத்தையும் புதுமையான சிந்தனைகளையும் கண்டு பாராட்டினா். இந்தக் கண்காட்சியில் மாணவ, மாணவிகள் பிரம்மாண்ட ஈபிள் டவா் மாதிரியை உருவாக்கி இருந்தது கண்காட்சியை கண்ட அனைவரையும் வியக்க வைத்தது. ,
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

