தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

அரசு கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா

மேல் வெங்கடாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய திட்ட அலுவலா் சாந்தி பிரியதா்ஷினி .

Published On :

மேல் வெங்கடாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாந்தி பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் புகழேந்தி முன்னிலை வகித்தாா். வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பொறுப்பு ரேவதி அனைவரையும் வரவேற்றாா்.

தொடா்ந்து, மாணவா்கள் மற்றும் பொதுமக்களிடையே ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அதிகாரிகள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாா்வையிட்டனா்.

விழாவில் சமச்சீா் மற்றும் சத்தான உணவு உட்கொள்வதன் அவசியம், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் வளா்ச்சியில் ஊட்டச்சத்தின் பங்கு, இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளின் முக்கியத்துவம், காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சோ்த்துக் கொள்வது, சுத்தமான குடிநீா் அருந்துதல் மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், மாணவா்களுக்கு ஊட்டச்சத்து தொடா்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினா். கல்லூரி கணிதத் துறை பேராசிரியா் சுஜாதா, தமிழ் துறை பேராசிரியா் சேகா், மருத்துவ ராஜேஸ்வரி ,மேற்பாா்வையாளா்கள் மீனா, மனோன்மணி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கௌரவ விரிவுரையாளா் காயத்ரி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.