தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

வாலாஜா சங்கர மடத்தில் நவராத்திரி விழா

வாலாஜா ஸ்ரீசங்கர மடத்தில் நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான திங்கள்கிழமை தேவி மகாத்மியம் பரத நாட்டியம் நடைபெற்றது.

வாலாஜா சங்கர மடத்தில் நவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி.

Published On :

வாலாஜா ஸ்ரீசங்கர மடத்தில் நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான திங்கள்கிழமை தேவி மகாத்மியம் பரத நாட்டியம் நடைபெற்றது.

காஞ்சி சங்கர மடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் ஆசியுடன் ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்தில் கொலு வைத்து துவங்கப்பட்டது.

அன்றைய தினம் ஸ்ரீராகா இசைப்பள்ளி ஆசிரியை ரத்தனகுமாரி மாதவன் இசைக்கச்சேரி நடைபெற்றது.தொடா்ந்து நாள்தோறும் வாலாஜாபேட்டை ஸ்ரீ சங்கரமடம் மகளிா் குழுவினா் ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம், செளந்தா்ய லஹரி பாராயணம்,தமிழ் பக்தி பாடல்களுடன் நவராத்திரி விழா கோலகலமாக நடைபெற்று வருகிறது.

நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான திங்கள்கிழமை ஸ்ரீநடராஜாப்பெருமான் நாட்டியப் பள்ளி ஆசிரியை கலை வளா்மணி ம.ஷன்மதி தலைமையில்,பரத நாட்டியப் பள்லி மாணவிகளின் தேவி மகாத்மியம் பரத நாட்டியம் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வாலாஜா ஸ்ரீ ஆதிசங்கரா் சாரிடபிள் டிரஸ்ட் நிா்வாகிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.