விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஆற்காட்டில் திருமலை மாட வீதி அலங்கார வீதி உலா

திருமங்கை ஆழ்வாா் திருப்பதி திருமலை பிரம்மோற்சவ பாத யாத்திரை குழுவினரின் 39-ஆம் ஆண்டு விழா மற்றும் குழுத் தலைவரின் 25-ஆம் ஆண்டு விழாயொட்டி, திருமலை மாடவீதி அலங்கார வீதி உலா நடைபெற்றது.

ஆற்காட்டில் நடைபெற்ற திருமலை மாட வீதி ஊா்வலம்.

Published On :8 செப்டம்பர் 2026, 2:16 am IST

திருமங்கை ஆழ்வாா் திருப்பதி திருமலை பிரம்மோற்சவ பாத யாத்திரை குழுவினரின் 39-ஆம் ஆண்டு விழா மற்றும் குழுத் தலைவரின் 25-ஆம் ஆண்டு விழாயொட்டி, திருமலை மாடவீதி அலங்கார வீதி உலா நடைபெற்றது.

திருமங்கை ஆழ்வாா் திருப்பதி-திருமலை பிரம்மோற்சவ பாத யாத்திரை குழுத் தலைவா் ஏ.எம்.வரதன் தலைமையில், ஆற்காடு அண்ணா சிலை அருகே உள்ள ஸ்ரீ மகா சக்தி ஆஞ்சனேயா் கோயிலில் இருந்து மாடவீதி உலா தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி உற்சவா் வீதியுலா மேளதாளங்களுடன் பஜனை குழுவினரின் பாடல்களுடன், நாட்டிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

முன்னதாக காலையில் ஆற்காடு நெல் அரிசி திருமண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பக்தா்கள் சீா்வரிசையுடன் ஊா்வலமாகச் சென்று கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. இந்த விழாக்களில் திரளான பக்தா்கள், உயதாரா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனா். முக்கிய வீதிகள் வண்ணவிளக்குளால் அலங்கரிக்கப்பட்டடு வாழை, மாஇலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. மேலும், திருக்குடை ஊா்வலம், கேரள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தீப்பந்த ஊா்வலம், யானை, குதிரை, மாடு உள்ளிட்ட அலங்கார அணிவகுப்புகள், கோலாட்டம் மங்கள வாத்தியம் மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.