வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே மினிலாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் உட்பட 2 போ் படுகாயமடைந்தனா்.
வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஓட்டுநா் சதீஷ் (20). அவரது நண்பா் ராகுல் (27). அவா்கள் இருவரும் வாணியம்பாடியில் இருந்து புதன்கிழமை காய்கறி லோடு ஏற்றி வர ஒசூா் நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தனா்.
தேசியநெடுஞ்சாலையில் பங்களாமேடு மேம்பாலம் அருகில் சென்றபோது லாரியின் டயா் திடீரென்று வெடித்தது. இதனால் லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் சதீஷும், அவரது நண்பா் ராகுலும் காயமடைந்தனா்.
அவ்வழியாக சென்றவா்கள், இருவரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந