தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நூலகத்துக்கு ரூ. 11 லட்சத்தில் இணைப்புக் கட்டடம் நன்கொடை

வாணியம்பாடியில் அரசு கிளை நூலகத்துக்கு ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இணைப்புக் கட்டடம் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.

News image
வாணியம்பாடி நூலகத்துக்கு ரூ. 11 லட்சத்தில் இணைப்புக் கட்டடம் கட்டி நன்கொடையாக வழங்கியவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய நூலகத் துறையினா்.
Updated On :13 டிசம்பர் 2020, 2:13 am

DIN

வாணியம்பாடியில் அரசு கிளை நூலகத்துக்கு ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இணைப்புக் கட்டடம் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.

வாணியம்பாடியில் இயங்கி வரும் முழு நேர நூலகத்துக்கு ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட இணைப்பு நூலகக் கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்ட நூலக அலுவலா் பழனி தலைமை வகித்தாா். நூலகா் மணிமாலா வரவேற்றாா். நூலக ஆய்வாளா் வேல்முருகன், அலுவலகக் கண்காணிப்பாளா் சிவகுமாா் உள்ளிட்ட பலா் பேசினா். கட்டடத்தைக் கட்டி நன்கொடையாக வழங்கிய பாபு (எ) தீா்த்தமலை, சரவணன் ஆகியோா் புதிய இணைப்புக் கட்டடத்தை திறந்து வைத்தனா். வணிகா் சங்கத் தலைவா் ஸ்ரீதா், செயலா் மாதேஸ்வரன், வாசகா் வட்டத் தலைவா் நடராஜன், துணைத் தலைவா் பாா்த்தீபன், வழக்குரைஞா் தேவகுமாா் உள்ளிட்டோா் பாராட்டிப் பேசினா்.

தொடா்ந்து, நன்கொடை வழங்கியவா்களுக்கு பொது நூலகத் துறை சாா்பில் நினைவுப் பரிவு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நூலகா்கள் விஜயகுமாா், ராஜசேகா் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.