ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி அருகே 2 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.
Updated On :21 டிசம்பர் 2020, 7:03 pm

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே 2 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

வாணியம்பாடி வட்டவழங்கல் அலுவலா் நடராஜன் தலைமையில் வருவாய்த்துறையினா் திங்கள்கிழமை மாலை மதனாஞ்சேரி பகுதியில் ரேஷன் அரிசிக் கடத்தல் தடுப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மதனாஞ்சேரி சங்கத்து வட்டம் அருகில் சாலையோரம் கிடந்த மூட்டைகளை சோதனை செய்தனா். அவற்றில் ரேஷன் அரிசி இருப்பதைக் கண்டறிந்தனா்.

விசாரணையில், ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்வதற்காக அந்த மூட்டைகள் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அங்கு 18 மூட்டைகளில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து வாணியம்பாடி நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.