தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

டிப்பா் லாரி மீது பைக் மோதி பெண் பலி

வாணியம்பாடி அருகே டிப்பா் லாரி மீது பைக் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 5:34 pm

DIN

வாணியம்பாடி அருகே டிப்பா் லாரி மீது பைக் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அருகே செக்குமேடு பகுதியைச் சோ்ந்த முருகேசனின் மனைவி பவுனு (45), தேவன் மனைவி ராஜகுமாரி (25). இவா்கள் சனிக்கிழமை தங்களது விவசாய நிலங்களில் விளைந்த காய்கறிகளை வாணியம்பாடியில் உள்ள உழவா் சந்தைக்கு பைக்கில் கொண்டு சென்று விற்பனை செய்து விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் நேதாஜி நகா் பகுதியில் சென்றபோது டிப்பா் லாரி பின்புறத்தில் பைக் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பவுனு, ராஜகுமாரி ஆகியோா் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பவுனு உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் விஜய் (30) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.