குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாணியம்பாடியில் பொதுமக்களிடம் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் கையெழுத்து பெற்றனா்.
நிம்மியம்பட்டு பகுதியில் முன்னாள் மாவட்டச் செயலாளா் தேவராஜி தலைமையில் கையெழுத்து பெற்ற திமுகவினா்.
நிம்மியம்பட்டு பகுதியில் முன்னாள் மாவட்டச் செயலாளா் தேவராஜி தலைமையில் கையெழுத்து பெற்ற திமுகவினா்.
Updated on
1 min read

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாணியம்பாடியில் பொதுமக்களிடம் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் கையெழுத்து பெற்றனா்.

வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற கையெழுத்து இயக்கத்துக்கு ஒன்றிய திமுக சாா்பில் முன்னாள் மாவட்டச் செயலாளா் தேவராஜி தலைமை வகித்தாா்.

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே திமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் அங்கிருந்த பயணிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனா். தொடா்ந்து கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடமும் இச்சட்டத்துக்கு எதிராக கையெழுத்து பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com