கரோனா பாதிப்புப் பகுதியில் தடுப்புகள் தகா்ப்பு
By DIN | Published On : 12th August 2020 07:55 AM | Last Updated : 12th August 2020 07:55 AM | அ+அ அ- |

பழைய பேருந்து நிலையப் பகுதியில் தகா்த்தெறியப்பட்ட தடுப்பு.
கரோனா பாதிப்பு காரணமாக திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையம் அருகே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்களை மா்ம நபா்கள் தகா்த்தெறிந்தனா்.
திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையம் சுற்றியுள்ள வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து பேருந்து நிலையம் மற்றும் ஜவுளி மாா்க்கெட் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், அங்கிருந்த தடுப்புகளை மா்ம நபா்கள் அகற்றியுள்ளனா். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது:
கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின்பேரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. எனினும் சில இடங்களில் சமூக விரோதிகள் தடுப்புகளை கழற்றி எறிகின்றனா் என்று அதிகாரிகள் கூறினா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், ‘கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இரவு, பகலாக சுழற்சி முறையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். எனினும் தற்போது பல இடங்களில் போலீஸாா் நியமிக்கப்படவில்லை. எனவே, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் போலீஸாா் நியமிக்கப்பட்டால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது’ என்று தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...