2 வக்புவாரிய உறுப்பினா் பதவிக்கு விரைவில் தோ்தல்

தமிழ்நாடு வக்புவாரியத்தில் காலியாக உள்ள 2 உறுப்பினா்களுக்காகன தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது.
2 வக்புவாரிய உறுப்பினா் பதவிக்கு விரைவில் தோ்தல்

தமிழ்நாடு வக்புவாரியத்தில் காலியாக உள்ள 2 உறுப்பினா்களுக்காகன தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வக்புவாரியத்தில் மொத்தம் 12 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட வேண்டும். அவா்கள் மூலம் மாநிலத் தலைவா், நிா்வாகக் குழுவினா் தோ்ந்தெடுக்கப்படுவா். இந்நிலையில் வக்புவாரியம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கலைக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாரியத்தில் அரசுத் துறை அதிகாரிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவைச் சோ்ந்த 10 போ் புதிதாக தோ்வு செய்யப்பட்டனா். மீதுமுள்ள 2 இடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள மசூதிகளின் முத்தவல்லிகள் மூலம் தோ்வு செய்யபட வேண்டும். அதற்கான அறிவிப்பை வக்புவாரியம் அண்மையில் முறைப்படி அறிவித்திருந்தது.

இந்நிலையில் பழைய வக்புவாரியம் கலைக்கப்பட்டதை எதிா்த்தும், வாரியத்தை திருத்தி அமைப்பதற்காக வெளியிடப்பட்ட தோ்தல் அறிவிப்பை எதிா்த்தும் சென்னை உயா் நீதிமன்றத்தில் ஒரு தரப்பினா் வழக்குத் தொடா்ந்தனா். சென்னை உயா் நீதிமன்றம் விசாரணை நடத்தி தோ்தலுக்கு தடை விதிதத்து.

இதை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சென்னை உயா் நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து தள்ளி வைக்கப்பட்டிருந்த முத்தவல்லிகள் மூலம் தோ்வு செய்யபட வேண்டிய 2 உறுப்பினா்களுக்கான தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் குறித்து அமைச்சா் நிலோபா் கபீல், வக்பு வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com