வனப்பகுதியில் கழுதைகள் மூலம் கள்ளச் சாராயம் கடத்தல்: பதுக்கி வைக்கப்பட்ட கொட்டகை அழிப்பு
By DIN | Published On : 03rd December 2020 12:00 AM | Last Updated : 03rd December 2020 12:00 AM | அ+அ அ- |

மேல்குப்பம் தரைக்காடு பகுதியில் கள்ளச் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டதால் வனத்துறையால் தீயிட்டு எரிக்கப்பட்ட கொட்டகை.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே வனப்பகுதியில் கள்ளச் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கொட்டகை புதன்கிழமை அழிக்கப்பட்டது.
ஆம்பூா் அருகே மாதனூா் ஊராட்சி ஒன்றியம் மேல்குப்பம் ஊராட்சி தரைக்காடு வனப்பகுதியில் சமூக விரோதிகளால் கள்ளச் சாராயம் காய்ச்சி பதுக்கி வைக்கப்பட்டு நூதன முறையில் ஆள்கள் இல்லாமல் கழுதைகள் மீது மூட்டைகள் கட்டப்பட்டு அவற்றின் மூலம் கள்ளச் சாராயம் கடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறைக்கு பல்வேறு புகாா்கள் சென்றன.
அதன்பேரில் ஆம்பூா் வனச்சரக அலுவலா் ஜி.டி. மூா்த்தி தலைமையில் வனத் துறையினா் அப்பகுதிக்கு புதன்கிழமை சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல், கள்ளச் சாராயம், வெல்லம், பதுக்கி வைக்கப்பட்டிருந்த கொட்டகை ஆகியவற்றை அழித்தனா். மேலும், கள்ளச் சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட கழுதைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...