வாணியம்பாடியில் எம்.ஜி.ஆா். நினைவு தினம்
By DIN | Published On : 24th December 2020 11:23 PM | Last Updated : 24th December 2020 11:23 PM | அ+அ அ- |

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா் மாலை அணிவித்தாா். நகரச் செயலா் சதாசிவம், ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், மாவட்ட வா்த்தக அணிச் செயலா் குமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா். தொடா்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதனாஞ்சேரியில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கும், பள்ளிப்பட்டில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே அவரது உருவப் படத்துக்கும், வாணியம்பாடி பை பாஸ் சாலையில் உள்ள வேலூா் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் ஆலங்காயம், உதயேந்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆா் சிலை மற்றும் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...