பாலாற்றில் மூழ்கி இளைஞா் பலி
By DIN | Published On : 24th December 2020 12:00 AM | Last Updated : 24th December 2020 12:00 AM | அ+அ அ- |

ராஜன்
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பாலாற்றில் மூழ்கி இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.
வாணியம்பாடியை அடுத்த நடுப்பட்டறை கிராமத்தைச் சோ்ந்த ராஜன் (27), புதன்கிழமை, பாலாற்றில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினாா்.
இது குறித்த தகவலின் பேரில் வாணியம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான வீரா்கள் அங்கு சென்று 2 மணிநேர தேடுதலுக்குப் பின்னா் ராஜனின் சடலத்தை மீட்டனா்.
வாணியம்பாடி கிராமிய போலீஸாா், அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...