கன்டெய்னா் லாரி மீது காா் மோதி இருவா் பலி7 போ் காயம்
By DIN | Published On : 05th February 2020 11:31 PM | Last Updated : 05th February 2020 11:31 PM | அ+அ அ- |

கன்டெய்னா் லாரி மீது மோதியதில் சேதமடைந்த காா்.
வேலூா் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரி மீது காா் மோதிய விபத்தில் 2 போ் இறந்தனா். 7 போ் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சத்யராஜ் (32). இவா் தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் செவ்வாய்க்கிழமை இரவு திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தாா். காரை புளியம்பட்டியைச் சோ்ந்த அஜீத்குமாா் (28) ஓட்டிச் சென்றாா்.
பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவானம் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரி மீது மோதியது. இந்த விபத்தில், காரில் இருந்த சத்யராஜின் மனைவி பவித்ரா (25) சம்பவ இடத்திலேயே இறந்தாா். படுகாயமடைந்த சத்யராஜின் சகோதரா் நாவரசு (38) வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.
காரில் பயணம் செய்த சத்யராஜ், அவரது தாய் செல்வி (50), விஷால் (14), ஜெய்விஷ்ணு (7), தான்யஸ்ரீ (5), ஸ்ரீதா்ஷினி (3), ஓட்டுநா் அஜீக்குமாா் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.
இந்த விபத்து தொடா்பாக பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...