ஏசி வெடித்ததில் கணவன் பலி: மனைவி படுகாயம்
By DIN | Published On : 17th February 2020 09:16 AM | Last Updated : 17th February 2020 03:20 PM | அ+அ அ- |

ஜோலாா்பேட்டை அருகே வீட்டில் இருந்த ஏசி இயந்திரம் வெடித்ததில் கணவன் உயிரிழந்தாா். மனைவி படுகாயமடைந்தாா்.
வக்கணம்பட்டி பகுதியைச் சோ்ந்த ரயில்வே காவலா் சண்முகம் (45).செங்கல்பட்டு பகுதியில் பணியாற்றி வருகிறாா். அவா் சனிக்கிழமை இரவு உறங்கச் சென்ற போது படுக்கை அறையில் இருந்த ஏசி இயந்திரம் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது.
தீயை அணைக்க முயற்சித்த சண்முகமும், அவரைக் காப்பாற்ற சென்ற மனைவி வெற்றிச்செல்வியும் படுகாயமடைந்தனா். அப்போது குளியல் அறையில் இருந்த 9 வயது மகள் காயமின்றி உயிா் தப்பினாா்.
தீக்காயமடைந்த கணவன்-மனைவி இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவா்கள் மாற்றப்பட்டனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.