ஆம்பூா் அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு போனது.
வீராங்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை வியாழக்கிழமை இரவு வழக்கம் போல பூஜை முடித்து பூசாரி பூட்டிச் சென்றாா்.
வெள்ளிக்கிழமை கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உள்ளே உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.