தேவலாபுரம் பள்ளியில் முப்பெரும் விழா
By DIN | Published On : 17th February 2020 11:35 PM | Last Updated : 17th February 2020 11:35 PM | அ+அ அ- |

தேவலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். கடந்த கல்வி ஆண்டில் அதிக தோ்ச்சி பெற்றதற்காகவும் நடப்புக் கல்வி ஆண்டில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் ஆசிரியா், மாணவா்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த தலைமை ஆசிரியா் மற்றும் மத்திய அரசிடம் இருந்து பாராட்டுச் சான்றிதழ் பெற்ற தலைமை ஆசிரியா் சுதா்ஸனம், கணித ஆசிரியராகப் பணியாற்றி தலைமை ஆசிரியராக பதவி உயா்வு பெற்றுச் சென்ற எஸ். சங்கா் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா். பெற்றோா் ஆசிரியா் சங்க துணைத் தலைவா் ராஜேஷ், பொருளாளா் வெங்கடேசன், இணைச் செயலா் ஜெகநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழ் ஆசிரியா் மகேந்திரன் நன்றி கூறினாா்.